பணியின்போது உயிரிழந்தவர் குடும்பத்திற்கு எம்டிசி 14 லட்சம் நிதி

சென்னை: பணியின்போது உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 14 லட்சம் நிதி வழங்கப்பட்டது.   சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி பணிமனையில், கடந்த 6.8.2019ல், இரவு பேருந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்ட வெங்கடேசன் (56), எதிர்பாராமல் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் குடும்பத்தினருக்கு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில்,  வருங்கால வைப்புநிதி தொகை 6.24 லட்சம், பணிக்கொடை தொகை 5.42 லட்சம் மற்றும் குடும்ப நலநிதி தொகை 3 லட்சம் என மொத்தம் 14.66 லட்சம் நிதி உதவிக்கான காசோலைகளை, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று பல்லவன் இல்லத்தில் வழங்கப்பட்டது.

Tags : deceased ,
× RELATED இந்தியன் 2 படபிடிப்பின்போது 3...