×

கந்தர்வகோட்டையில் தியணைப்பு துறையினர் இயற்கை பேரிடர் பிரசாரம்கந்தர்வகோட்டை, அக்.1: கந்தர்வகோட்டையில் குடிசைப் பகுதிகள் அதிகம் உள்ள இடங்களில் மழை காலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடரின்போது எவ்வாறு செயல்படுவது என தீயணைப்பு வீரர்கள் பிரசாரம் செய்தனர்.கந்தர்வகோட்டையில் அக்கச்சிப்பட்டி மற்றும் செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மழை காலங்களில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் செழியன் உத்தரவின்பேரில் கந்தர்வகோட்டை நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு துறையினர் தனது குழுவினருடன் ஒத்திகை மற்றும் பிரசாரம் மேற்கொண்டனர்.

Tags : Department of Natural Disaster Management ,
× RELATED அனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது