×

குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு பொன்னமராவதி பகுதியில் தொடர் கதை ஆடு திருட்டு சம்பவங்களால் கிராம மக்கள் அச்சம், பீதி

பொன்னமராவதி, அக். 1: பொன்னமராவதி பகுதியில் ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகின்றது.பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியை சேர்ந்தவர் பனையப்பன(47). அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 28ம்தேதி நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஆட்டை திருடிச் சென்றுள்ளனர். இரண்டு குட்டிகளை விட்டுவிட்டு ஆட்டை மட்டும் திருடிச்சென்றுள்ளனர்.. இது குறித்து பொன்னமராவதி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல சமீபத்தில் சொக்கநாதபட்டியில் தர்மன் என்பவரது ஆட்டையும் இரவு நேரத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.

அம்மன்குறிச்சி கோயில் தெருவில் வசிக்கும் முத்து லட்சுமி என்பவரது ஆட்டையும் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல கண்டியாநத்தம் முருகையா என்பவரது வீட்டில் நின்ற ஆடுகளும் திருட்டு போயின. வலையபட்டியில் மோகன் என்பவரது ஆட்டையும் திருடி சென்றுள்ளனர். அதேபோல் அம்மன்குறிச்சியில் ஓய்வு பெற்ற விஏஒ பெருமாள் என்பவரது வீட்டில் கட்டிப்போட்டிருந்த ஆட்டை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் பொன்னமராவதி போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மன வருத்தத்துடன் தெரிவித்தனர். போதிய மழை இல்லை. ஆடுகள் வளர்த்தாவது பிழைக்கலாம் என ஆடுகளை வளர்ப்போரும் இது போன்ற திருட்டு சம்பவங்களால் பெரிதும் மனம் நொந்துள்ளனர். எனவே தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வரும் ஆசாமிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Manu Ponnamaravathi ,meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்