×

குவாரி மணல் முறைகேடாக விற்பனை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

அறந்தாங்கி, அக்.1:அறந்தாங்கி அருகே வௌ;ளாற்றில் அரசு மணல் குவாரியில் அள்ளப்படும் மணலை லாரிகளில் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக கூறி, பொதுமக்கள் 8 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அறந்தாங்கி அடுத்த அழியாநிலை பகுதியில் வௌ்ளாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் அள்ளப்படும் மணல், டாரஸ் லாரிகளில் ஏற்றப்பட்டு, பெருங்காடு கோவில்வயல் பகுதியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்டு, அங்கிருந்து முன்னுரிமை அடிப்படையில் லாரிகளுக்கு மணல் வழங்கப்படுகிறது. அழியாநிலை பகுதியில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, மணல் குவாரி தொடங்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி, மணல் குவாரியை திறந்தனர்.

இந்த நிலையில் மணல் குவாரியில் இருந்து டாரஸ் லாரிகளில் ஏற்றப்படும் மணல் மணல் சேமிப்பு கிடங்கிற்கு செல்வதோடு, பல நடைகள் முறைகேடாக தனியாருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, மணல் குவாரியில் இருந்து கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கிற்கு நேற்று மணல் ஏற்றிச் சென்ற 8 டாரஸ் லாரிகளை அழியாநிலை கிராம மக்கள் சிறைபிடித்து, அழியாநிலை அரியநாயகிஅம்மன் கோயில் பகுதிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் டி.எஸ்.பி கோகிலா, சப் இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களிடம் டி.எஸ்.பி கோகிலா பேச்சுவார்த்தை நடத்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு ஏற்படும்வரை, லாரிகளை கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கு பகுதியில் நிறுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்தனர். அறந்தாங்கி அருகே மணல்குவாரியில் இருந்து மணல் சேமிப்பு கிடங்கிற்கு செல்லும் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : strikes ,
× RELATED ஏமனில் ஹவுதி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்