×

காரைக்காலில் நவராத்திரி கொலு தர்பார் துவக்கம்

காரைக்கால், அக்.1: நவராத்திரி விழாவை முன்னிட்டு, காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் தொடங்கியது.நவராத்திரி விழாவை முன்னிட்டு, காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், கைலாசநாதர் கோவில் மற்றும் காரைக்கால் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி கொலு தர்பார் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. கொலு தர்பாரை, திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் அம்பலவாணன் சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அசனா, கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அக்டோபர் 8ம் தேதி வரை இந்த கொலு தர்பார் நடைபெறும் என அறங்காவல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, காரைக்கால் அண்ணாமலை ஈஸ்வரர் ஆலயத்தில் தொடங்கிய கொலு அலங்காரத்தை, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொலு தர்பாரை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Tags : Navratri Kolu Darbar ,Karaikal ,
× RELATED காரைக்காலில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு