×

கலெக்டர் பெருமிதம் சீர்காழியில் பாலித்தீன் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சீர்காழி, அக்.1: சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பாலித்தீன் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் வரவேற்றார். டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் ரஞ்சித்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியில், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பாலித்தின் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தவாறு பிரதான வீதிகளில் முழக்கங்கள் எழுப்பிச் சென்றனர்.
இதில், கோவிந்தராஜன், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Polythene Substance Abolition Awareness Rally ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு