×

தூக்கணாங்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை அடைப்பு

மயிலாடுதுறை,அக்.1: மயிலாடுதுறை அருகே தூக்கணாங்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் மயிலாடுதுறை 18, 19 மற்றும் 20வது வார்டுகளுக்கு பொதுவான இடத்தில் அமைந்துள்ளது தூக்கணாங்குளம். இது 6 ஏக்கர் பரப்பு கொண்டதாக உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை. இதற்கு காரணம் இந்தக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை 200 மீ தூரத்திற்கு ஆங்காங்கே அடைத்தும் மண்ணால் தூர்ந்தும்போய் கிடக்கிறது, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் சேகரிப்பு என்று மத்திய மாநில அரசுகள் தினந்தோறும் காட்டுக் கத்தாக கத்தினாலும் அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டு விடுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறையில் உள் பல குளங்களில் இதுவரை தண்ணீர் நிரம்ப வில்லை.

குறிப்பாக 6 ஏக்கர் விஸ்தீர்ணம் கொண்ட தூக்கணாங்குளம் பகுதியாகும். இக்குளத்திற்கு தண்ணீர்வரும் பாதை மழைநீர் வடிகால் போன்று இருந்தாலும் 90 சதவீதம் முற்றிலும் தூர்ந்துபோய் உள்ளது. இவற்றை சரிசெய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்குளத்தில் தனியார் மீன்வளர்த்த வந்துள்ளனர். அதுவும் இந்த ஆண்டு செய்யவில்லை. எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு மட்டும்தான் தொடர்ந்து மயிலாடுதுறையில் மழை பெய்து வருகிறது. இருந்தும் நிலத்தடி நீர் மட்டம் குறிப்பிட்ட அளவுக்குமேல் ஏறவில்லை. காரணம் மயிலாடுதுறையில் உள்ள குளங்களுக்குச் செல்லும் பாதை சரிசெய்யப்படவில்லை. குளத்திற்குத் தண்ணீர்விடும் பணியை சரிவர செய்யவில்லை. அதனால் குளத்தில் தண்ணீர் இல்லை.இதுகுறித்து தனியார் அமைப்பினர் குளங்களுக்குச் செல்லும் பாதையை சரிசெய்வதாகவும் தூர்வாரப்போவதாகவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினர். ஆனால் அவர்களும் இதுவரை அப்பணியை துவங்கவில்லை. இதுபோன்று விடுபட்ட குளங்களுக்கு செல்லும் பாதையை சரிசெய்து தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

Tags :
× RELATED குத்தாலம் அருகே மருத்தூரில் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா