×

திருப்பத்தூர் அருகே ஆசை வார்த்தை கூறி நர்சிங் மாணவியை கடத்தி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருப்பத்தூர், அக்.1: திருப்பத்தூர் அருகே ஆசைவார்த்தை கூறி நர்சிங் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யகுமார்(20). இவர் அங்குள்ள கறிக்கடையில் வேலை செய்து வந்தார். திருப்பத்தூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதுள்ள மாணவி பர்கூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கச் சென்றார்.கல்லூரிக்கு தினமும் பேருந்து மூலம் செல்லும்போது சத்யகுமாருக்கும், மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலமாக மாறியது. இதையடுத்து, இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், சத்யகுமார் ஆசை வார்த்தை கூறி பெங்களூருக்கு அழைத்துச்சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து மாணவியின் தாயார் நேற்று கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சத்யகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Lawyer ,Nursing student ,Tirupathur ,
× RELATED ஒரு வேளை சாப்பாட்டுக்காக... கூடை பின்னும் தொழிலாளியாக மாறிய வக்கீல்