×

கோவில்பட்டியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

கோவில்பட்டி, அக். 1: கோவில்பட்டியில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தினம்  கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ராமர் தலைமை வகித்தார். செயலாளர்  முத்துராமன், பொருளாளர் செல்வின்சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக  அரசு சார்பில் 2019-20ம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது  பெற்ற கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  பணியாற்றும் தலைமை ஆசிரியர் ராணியை பாராட்டி, சங்க தலைவர் ராமர் சால்வை  அணிவித்து பரிசு வழங்கி கவுரவித்தார். ராஜாமணி, நாராயணசாமி, எட்டப்பன்,  கந்தசாமி, காளிராஜ், ராஜேஸ், சந்திரசேகர், ராமசாமி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.


Tags : Teachers Day Celebration ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை,...