×

குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பரிசு

தூத்துக்குடி, அக். 1: தூத்துக்குடி   மாவட்டத்தில்  குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு 10, 12ம்   வகுப்பு மற்றும் உயர்கல்வி பயிலும் 60 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர்   சந்தீப் நந்தூரி  பரிசுகள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்   அலுவலக கூட்டரங்கில், தேசிய குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர்   திட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு 10, 12ம் வகுப்பு   மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும்   நிகழ்ச்சி  நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி    கலந்துகொண்டு, 60 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். குழந்தை   தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளில், 2018-19ம்   கல்வியாண்டில் விளாத்திகுளம் சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்று 10ம்   வகுப்பு பொது தேர்வு எழுதி தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் இடத்தையும்,   மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பெற்ற அபிநயா என்பவருக்கு பரிசு மற்றும்   கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி சப்-கலெக்டர்  சிம்ரான் ஜீத் சிங் காலோன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி,   தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட மாவட்ட இயக்குநர் ஆதிநாராயணன்,  மாவட்ட  திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  ஜோதிகுமார்,  குழந்தை தொழிலாளர் நல ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும்  அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

Tags : child laborers ,
× RELATED சிறுமிக்கு எஸ்பி பரிசு