×

தருவைகுளத்தில் அசன விருந்து

குளத்தூர், அக். 1: தருவைகுளம் ஆலய திருவிழாவில் பொதுமக்களுக்கு அசன விருந்து நடந்தது. தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா, கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. நேற்று திருவிழா நிறைவாக கொடியிறக்கபட்டு ஜெபமாலை, ஆராதனை, திருப்பலி நடந்தது. தொடர்ந்து கன்னியகுமரி, தூத்துக்குடி மற்றும் தருவைகுளம் மீனவர்கள் இணைந்து மதியம் 11 மணிக்கு பொதுமக்களுக்கு அசனவிருந்து அளித்தனர். பங்குதந்தைகள் எட்வர்ட்ஜே, பர்னபாஸ் மற்றும் ஆல்பர்ட் ஸ்டீபன் திலகராஜாசிறப்பு ஜெபம் செய்து அசன விருந்தை துவக்கி வைத்தனர். இதில் தருவைகுளம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தருவைகுளம் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Asana ,party ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...