ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம்

கும்பகோணம், அக். 1: திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் நேற்று புரட்டாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை பல்லக்கில் சுவாமி வீதியுலா, 7ம் தேதி வெண்ணெய் தாழி, 8ம் தேதி சிறிய தேர் வடம் பிடித்தலும், 9ம் தேதி மதியம் 1.30 மணிக்கு மேல் மூலவர் திருமஞ்சனமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Protaci Festival Festival ,Anilalippan Temple ,
× RELATED பட்டுக்கோட்டை ரயில்வே கேட்டில்...