×

அதிரை அருகே சாமி சிலைகளின் கைகள் உடைப்பு

அதிராம்பட்டினம், அக்.1: அதிராம்பட்டினம் அருகில் உள்ள மகிழங்கோட்டை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஒரு சமூகத்துக்கான குலதெய்வ கோயில், கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ளது. இந்த கோயிலில் பெரிய சாம்பவ மூர்த்தி, சிறிய சாம்பவ மூர்த்தி மற்றும் வீரனார் சாமி ஆகிய சாமி சிலைகள் உள்ளன. இந்த கோயில் தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை ஆகிய கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு சொந்தமானது. இந்நிலையில் குலதெய்வ பூஜை வரும் 14ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் சாமி சிலைகளை சுத்தம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை கோயிலுக்கு மக்கள் சென்றனர். அப்போது அங்கு 3 சாமி சிலைகளி–்ன் உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சசிக்குமார் என்பவர் புகார் செயதார். இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Sami ,vibe ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...