×

கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும்

பட்டுக்கோட்டை, அக். 1: பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவல்லபிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் கீழானூர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் கடைமடை பகுதிகளுக்கு தொடர்ந்து முறை வைக்காமல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 80 சதவீத ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை. எனவே ஏரி, குளங்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் நிரப்ப வேண்டும். பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை போக்க புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இளந்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கண்டனம் தெரிவிப்பது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பட்டுக்கோட்டை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : stall area ,
× RELATED தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய்...