×

கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு புதுக்குடியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

திருக்காட்டுப்பள்ளி, அக். 1: அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் புதுக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.பூதலூர் தாலுகா ராயமுண்டான்பட்டி, சொரக்குடிப்பட்டி, புதுக்குடி வரை செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே இதை கண்டித்து இன்று (1ம் தேதி) தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்டயம்பட்டி மற்றும் மனையேறிப்பட்டி கிளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பூதலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பூதலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அன்சாரிராஜா, வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோர் போராட்டக்காரர்கள் கண்ணன், பாஸ்கர், விஜயகுமார், சுகுமாறன், ராஜா, முகமதுசுல்தான், தமிழ்செல்வி உள்ளிட்டோருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கிராம சாலைகளை ஒரு வாரத்துக்குள் ஆய்வு செய்து முடிவு தெரிவிப்பதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், மார்ச் 2020க்குள் சாலைகளை புதுப்பித்து தருவதாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளரும் உறுதியளித்தனர். இதையேற்று சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Tags : police officers ,withdrawal ,
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...