×

ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

தஞ்சை, அக். 1: தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (60). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 1 தோடு, 1 மூக்குத்தி என 2 பவுன் நகையும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் பாஸ்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Retirement soldier ,jewelery ,
× RELATED சென்னையில் நகை பட்டறையில் 118 சவரன்...