×

நீர்வள, நிலவள திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

கும்பகோணம், அக். 1: கும்பகோணம் வேளாண்மை அலுவலகத்தில் நீர்வள, நிலவள மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் வேளாண்மை இயக்குனர் நாராயணசாமி தலைமை வகித்து பேசுகையில், விவசாய விளை நிலங்களின் உற்பத்தி திறனை பெருக்குவதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் நீர்வள, நிலவள மேம்பாட்டு திட்டம் பயன்படுகிறது. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குழு மூலம் உயிரியல் காரணிகள் உற்பத்தி மையத்தை கிராமங்களில் அமைக்க வேண்டும். இந்த உயிரியல் காரணிகளை தாமாகவே உற்பத்தி செய்து பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு குறைவதுடன், சாகுபடி செலவும் குறைகிறது. தேவையான ஒரு தொழில்நுட்பத்தை சிறுதொழிலாக செய்து குழு உறுப்பினர்கள் பயன்பெற வேண்டும். இத்திட்டம் அனைத்து கிராங்களுக்கும் சென்றடைய செய்ய வேண்டும் என்றார். மேம்பாட்டு திட்ட சிறப்பு ஆலோசகர் இளவரசன், தஞ்சை மாவட்ட இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களின் உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை மாவட்ட தர கட்டுப்பாடு உதவி இயக்குனர் சாருமதி வரவேற்றார். கும்பகோணம் வட்டார உதவி இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Tags : Land Planning Workshop ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்