×

கச்சிக்குடா ரயில் இன்று தாமதமாக ஓடும்

நாகர்கோவில், அக்.1:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு:பொறியியல் சார்ந்த பணிகள் திருச்சி, கரூர் பிரிவில் நடைபெற இருப்பதால் இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்: 16354 நாகர்கோவில் - கச்சிக்குடா வாராந்திர எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து இன்று (1ம் தேதி) புறப்படுவது ஒரு மணிநேரம் திருச்சி, பேட்டைவாய்த்தலை பகுதியில் நிறுத்தி விடப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நித்திரவிளை அருகே வீட்டின் மீது சாய்ந்த தென்னை மரம்