அரசு மருத்துவமனை சுவரில் மோதிய கார்

கருங்கல், அக். 1: கருங்கல் அரசு மருத்துவமனை சுண்டவிளை பகுதியில் உள்ளது. இப்பகுதி வழியாக அதிகாலை வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனை காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்தது. காரின் முன்பகுதி சேதமடைந்தது.காரை ஓட்டி வந்த ஆலஞ்சி பகுதியைச் சேர்ந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுவரின் மறுபக்கம் பெரிய பள்ளம் உள்ளது. கார் சுவரில் மோதி நின்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கருங்கல் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

Tags :
× RELATED பிரபல கார் திருடன் கோவையில் கைது