×

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கும்மிடிப்பூண்டி, செப். 30:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கவரைப்பேட்டையில் நடக்க உள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை)  காலை 10 மணியளவில், கவரைப்பேட்டை ஜி.என்.டி சாலையில் அமைந்துள்ள சாய்நிவாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் தலைமையில் நடக்கவுள்ளது. இதற்கு, தலைமை  செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வரவேற்கிறார். கீழ்முதலம்பேடு ஊராட்சி செயலாளர் கே.ஜி.கோபால் நன்றி கூறுகிறார். இக்கூட்டதிற்கு, மாநில, மாவட்ட, செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகிகளான க.சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஓ.ஏ.நாகலிங்கம்,  சி.எச்.சேகர், ஜெ.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணியாற்றுவது மற்றும் உள்ளாட்சித் தேர்தல் எப்படி எதிர் கொள்வது, அத்தோடு கழக ஆக்கப்பணிகள் குறித்து  ஆலோசனை செய்யப்படுகிறது. இதற்கு ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள்  அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thiruvallur North District ,DMK ,Executive Committee Meeting ,
× RELATED கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் திடீர் கைது