×

பைக் மீது கார் மோதியதில் வாலிபர் பலி

பெரும்புதூர், செப்.30: தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38), இவர் தாம்பரம் பகுதியில் தங்கி பெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து தனது பைக்கில் பெரும்புதூர்-தாம்பரம் சாலை வழியாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொளத்தூர் அருகே சென்று வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் பிரகாஷ் ஓட்டி வந்த பைக் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.இதில் படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை தேடி வருகின்றனர்.

Tags : Plaintiff ,
× RELATED நீலகிரியில் ஆய்வு செய்து விட்டு...