×

கருங்குழியில் மர்ம நபர்கள் துணிகரம் ஆசிரியை வீட்டில் 75 சவரன், பணம் கொள்ளை: மதுராந்தகம் காவல் எல்லையில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்

மதுராந்தகம், செப். 30: மதுராந்தகம் அருகே கருங்குழியில்,  அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து 75 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபோன்று, மதுராந்தகம் காவல் எல்லயைில் அதிகாரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி, ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வசிப்பவர் லூர்து டேவிட் (52). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (50). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். மற்றொரு, அறையில் மகன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் டேவிட்டும், அவரது மனைவியும் எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்தநிலையில் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பீரோவை போய் பார்த்தனர். அதில், வைத்திருந்த 75 சவரன் நகைகள் மற்றும் ₹50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து, வீட்டின் கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அவற்றை பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒத்து போகின்றதா என ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து மேப்பநாய் வரவழைக்கப்பட்டது. அத, சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.இதுபற்றி, கொடுக்கப்பட்ட புகாரின்படி, மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், டி.எஸ்.பி., மகேந்திரன் உத்திரவின்பேரில், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சமீப காலமாக மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகாரித்து வருகின்றன.குறிப்பாக, கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலவளம்பேட்டையில் ஒரு வீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் வீடு புகுந்து தம்பதியை கத்தியால் வெட்டி அங்கிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தற்போது தலைமை ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து உள்ளனர்.கருங்குழி பகுதியில், தொடர்ந்து கொள்ளை நடப்பதால் அப்பகுதி பொதுமக்கள் எப்போது என்ன நடக்குமோ என்று பெரும் பீதியில் உள்ளனர்.

Tags : blacksmith home ,persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...