×

திருப்போரூர் பேரூராட்சியில் குடிநீரில் மிதக்கும் புழுக்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

திருப்போரூர், செப்.30: திருப்போரூர் ேபரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறுதாவூர், செம்பாக்கம் கொண்டங்கி ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு,  பொதுக்கழாய் மற்றும் வீட்டு இணைப்பு  குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.  கடந்த 6 மாதமாக திருப்போரூர் ேபரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அனைத்து தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, முக்கிய வீதிகளில் மின்சார கம்பங்களை அகற்றிவிட்டு, கேபிள்கள் பதிக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இந்த இரு பணிகளின் போதும் ஒப்பந்தப பணியாளர்கள் சாலைகளில் பள்ளம் தோண்டும் போது, ஆங்காங்கே குடிநீர் இணைப்பு குழாய்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதன்காரணமாக பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாவதோடு, பள்ளங்களில் குடிநீர் தேங்கி, சாக்கடையாக மாறி, அவற்றில் புழுக்கள் உற்பத்தியாகின்றன. இதை மீண்டும் குழாய்கள் வழியாக பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சென்று கலக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பாத்திரங்களில் பிடித்து வைக்கும் தண்ணீர் புழுக்கள் மிதக்கின்றன. இவற்றை அருந்ததுவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல்,  சளி போன்ற பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. பேரூராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மேற்கொள்ளும் ஒப்பந்த பணியாளர்களிடம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படும்போது, உடனடியாக  சரி செய்து தரவோ அல்லது பேரூராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கவோ  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED இடைத்தரகர்களால் சிதையும்...