×

துறையூர் அருகே பாலப்பணியால் கிராமத்திற்குள் ஒரு மாதமாக வராத அரசு பஸ் 1 கி.மீக்கு முன்பே பயணிகளை இறக்கிவிடும் அவலம்

துறையூர், செப்.30: பாலப்பணிகள் நடப்பதால் துறையூர் அருகே மாராடி கிராமத்திற்கு கடந்த ஒரு மாதமாக அரசு பஸ்கள் வராமல் 1 கி.மீக்கு முன்பே இறக்கிவிட்டு மாற்று வழித்தடத்தில் சென்றுவிடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.துறையூரிலிருந்து மாராடி கிராமம் வழியாக கோட்டப்பாளையம், பி.மேட்டூர் வரை அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. தற்போது மாராடியிலிருந்து கோட்டப்பாளையம் செல்லும் சாலையில் 3 பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதமாக இப்பணி விட்டுவிட்டு நடைபெறுகிறது. தற்போது கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் செல்லும் அரசு பஸ்கள் கிராமத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். பாலம் வேலை செய்யும் பகுதியில் மாற்று வழிச்சாலை பகுதியில் சரியான முறையில் சாலை அமைக்காமல் மண்ணை மட்டும் கொட்டப்பட்டு இருந்ததால் குண்டும், குழியுமாக ஆனதால் பேருந்துகள் செல்ல முடியாமல் தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. தற்போது மழை பெய்ததால் அந்த வழித்தடத்தில் செல்ல முடியாமல் டிரைவர்கள் தவித்தனர்.

இதையடுத்து மாராடி கிராமத்திற்குள் வராமல் மாற்று வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே மாராடி கிராமத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 1 கி.மீக்கு முன்பே பஸ்களை மாற்று வழியில் இயக்குவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக கூறுகின்றனர். காலை, மாலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் நகர்புறத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் அனைவருக்கும் பெரிதும் சிரமத்திற்குள்ளவதாகவும், துறையூர் நகருக்கு வேலைக்குச் சென்று வரும் பெண்களை இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் இறக்கி விடப்படுவதால் பாதுகாப்பு இன்றி ஊருக்கு வர முடியாமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர். ஊருக்குள் பஸ் இயக்க முடியாது டீசல் சிக்கனம் எனக்கூறி விட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகவே பாலத்தில் வேலையை சீக்கிரம் முடித்து எங்களுக்கு இதன் வழியாக பஸ் இயக்க வேண்டும் என்றும் தற்போது பாலம் வேலை முடியும் வரை மாராடி கிராமம் வரை பஸ் இயக்க மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Palampani ,passengers ,Thuraiyur ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...