×

திருவானைக்காவல் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

திருச்சி, செப்.30: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது.பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கி வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான நேற்று மாலை அம்பாள் ஏகாந்த அலங்காரத்தில் 2ம் பிரகாரத்தில் வலம் வந்து, கண்ணாடிசேவை கண்டருளி, கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். அம்பாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

2, 3ம் நாட்களில் அம்பாள் ஏகாந்த காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாலிக்கிறார். 4ம் நாளான 2ம்தேதி ராஜ அலங்காரத்திலும், 3ம் தேதி தாம்பூலம் தரித்தல் அலங்காரத்திலும், 4ம் தேதி ஜெப வழிபாடு அலங்காரத்திலும், 5ம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 6ம் தேதி சிவலிங்கம் வழிபாடு அலங்காரத்திலும், 7ம் தேதி மகிஷாசூரன் வதை அலங்காரத்திலும், 8ம் தேதி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி 4ம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.விழாவையொட்டி நவராத்திரி மண்டபத்தில் தினமும் மாலை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Navratri festival ,Thiruvanaikaval temple ,
× RELATED திருச்சியில் திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்..!!