×

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் முத்துப்பேட்டையில் இடிந்து விழும் நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம்

முத்துப்பேட்டை ,செப்.30: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 29ஊராட்சிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பல்வேறு பணிகளுக்கு இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த வளாகத்தில் வட்டார வளர்ச்சி துறை மட்டும் அல்லாமல் அதை சார்ந்த பல்வேறு துறை அலுவலகமும் செயல்படுகிறது. வேளாண்மை துறை அலுவலகம் இதில் தான் இயங்கி வருகிறது. இந்நிலையில் இதன் கட்டிடங்களை அலுவலர்கள் முறையாக பராமரிக்கப்படாததால் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் போல தூசி, ஒட்டை, அழுக்குகள் படிந்து சுத்தமாக பொலிவு இழந்து உள்ளது. மேலும் கட்டிடங்களும் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பில்லர் மற்றும் சிலாப் கம்பிகள் வெளியில் தெரியும் நிலைமையில் உள்ளன. இதில் குறிப்பாக அலுவலகத்தின் நடுவில் உள்ள பழமையான கட்டிடம் கம்பீரமாக காட்சி அளித்தாலும் அதன் பல பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாததால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி கட்டிட உள்பகுதிக்கு சென்று அதன் கம்பிகள் பொலிவடைய செய்து முற்றிலும் சேதமாகியுள்ளன. இதில் முன்பகுதி கட்டிடத்தின் மாடிப்படிகள் கீழ்புறம் மற்றும் மேல்புறம் சிமென்ட் பூச்சுகள் விழுந்து எலும்பு கூடாக எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதுபோன்று பல்வேறு பகுதி தாங்கு பில்லர் தூண்களும் அதே நிலையில் உள்ளதால் எந்நேரத்திலும் இடிந்து விழுந்து அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கும் அதேபோல் அலுவலக ஊழியர்களுக்கும் பாதிப்புகள் அடைய வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் கட்டிடத்தில் மேல் மாடியில் சிமென்ட் பூச்சு சேதமாகி உள்ளதால் மழை நேரத்தில் தண்ணீர் ஒழுகுகிறது. அதேபோல் அலுவலகம் சுற்றிலும் கட்டிடத்தின் சுவர் ஓரங்களில் தேவையற்ற பொருட்கள் குவியல் குவியலாக கிடப்பதால் கட்டிடத்தின் அஸ்திவாரமும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளன. அதேபோல் அலுவலகத்தை சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியும் அதிகளவில் உள்ளது . இது குறித்து முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சித்துறை அலுவலக அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு பொலிவு இழந்து வரும் அலுவலக கட்டிடங்களை சீரமைக்க முன் வரவேண்டும், அதேபோல் எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ள மாடிப்படிகள் மற்றும் சேதமான தாங்கு பில்லர்களை அகற்றிவிட்டு புதியதாக அமைக்கவேண்டும், அலுவலக பகுதிகளை தூய்மையும் படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Regional Development Office Building ,
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்