×

குடந்தை கோயிலில் மகாளய அமாவாசை திருப்பதி பாலாஜி அலங்காரத்தில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்

கும்பகோணம், செப். 29: மகாளய அமாவாசையை முன்னிட்டு கும்பகோணத்தில் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு திருப்பதி பாலாஜி அலங்காரம் செய்து கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.கும்பகோணம் நீலத்தநல்லுார் சாலை காமராஜர் நகர் மெயின்ரோடு விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் படி மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடு தொடங்கியது.விவசாயம் செழிக்கவும், இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்படாமலிருக்கவும், உலக நன்மைக்காகவும் பக்தர்கள் மகா சங்கல்பம் செய்து கொண்டனர். மேலும் தொடர்ந்து 5 மணி நேரம் அகண்ட ராமநாம பாராயணம், வருண ஜெபம், நாம சங்கீர்த்தனம், கூட்டு வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்து மூலவர் மற்றும் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கும், நவக்கிரக சுவாமிகளுக்கும் திருப்பதி பாலாஜி போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமி பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Visvarupa Jayamaruti Anjaneyar ,Kundantai Temple ,Mahavaya Amavasya Tirupati Balaji ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா