×

பாபநாசம்- சுந்தரப்பெருமாள் கோவில் பைபாஸ் செல்லும் குறுக்கு சாலை சேதம் வாகன ஓட்டிகள்

அவதிபாபநாசம், செப். 29: பாபநாசம்- சுந்தரப்பெருமாள் கோவில் பைபாஸ் செல்லும் குறுக்கு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம்- கபிஸ்தலம் செல்லும் சாலையில் திருமலைராஜன் ஆற்றின் கரை வழியே செல்லும் சாலையானது சுந்தரப்பெருமாள் கோயில் பைபாசில் சென்று சேர்கிறது. கும்பகோணத்துக்கு இந்த பைபாஸ் சாலை வழியாக தான் செல்ல வேண்டும். திருமலைராஜன் ஆற்றின் கரை வழியாக செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 5 கிலோ மீட்டர் தூரமுடைய இந்த சாலையானது முதல் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் செல்லக்கூடிய நிலையில் இருந்தாலும் மீதமுள்ள 3 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கூறுகையில், இந்த சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெருக்கடியின்றி சுந்தரப்பெருமாள் கோயில் பைபாஸ் சாலை சென்றடையலாம். கும்பகோணம், உத்தாணி செல்பவர்கள் போக்குவரத்து நெருக்கடியின்றி செல்லலாம் என்பதால் இந்த சாலையை பயன்படுத்துவர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுந்தரப்பெருமாள் கோயில் பைபாஸ் செல்லும் குறுக்குவழி பாதையான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

Tags : Motorists ,road ,Bapanasam-Sundaraperumal ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...