×

அரசு பள்ளியில் மருத்துவ முகாம்

சேதுபாவாசத்திரம், செப். 29: சேதுபாவாசத்திரம் அருகே பழுக்காடு கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நீலாவதி, ஆசிரியர் பிரபாகரன், பழுக்காடு முத்துத்துரை, முத்தையன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார்.அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார மையம், பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட என்எஸ்எஸ் தொடர்பு அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Medical Camp ,
× RELATED 70வது நாளாக தமிழக பள்ளிகளுக்கு பூட்டு...