×

மகாளய அமாவாசை குடந்தை காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடல் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

கும்பகோணம், செப். 29: மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் ஆறு, குளங்களில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, பாணாதுறை படித்துறை, சக்கர படித்துறை, அரசலாறு, மகாமகம் குளம் ஆகிய இடங்களில் அதிகாலை 4 மணி முதல் பகல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் சாதுக்கள், சன்னியாசிகள், ஆதரவற்றவர்களுக்கு உணவு பொருட்கள், புதிய ஆடைகளை வழங்கினர். தொடர்ந்து அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Devotees ,Cauvery River ,Kahawanda ,Mahaweli Amavasya ,ancestors ,
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை