×

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு நகராட்சி ஆணையரிடம் மக்கள் மனு

அரியலூர்,செப்.30: அரியலூர் மேற்கு தெருவில் மாடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள செல்போன் கோபுரத்துக்கு தடை கோரி அரியலூர் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர் அரியலூர் மேற்குத் தெருவில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் அங்குள்ள பால்பண்ணையில் மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. செல்போன் கோபுரத்தின் மூலம் ஏற்படும் கதிர்வீச்சின் காரணமாக பொதுமக்களுக்கு பல நோய்கள் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் மூலம் அறிந்தோம். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என பெரும்பாலோர் பாதிப்புக்குள்ளாவார்கள். அந்த இடத்தினை செல்போன் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாமென இடத்தின் உரிமையாளரிடம் கோரிக்கை விடுத்தும் அவர் மறுத்துவிட்டார், எனவே அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க கோரி நகராட்சி ஆணையரிடம் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். இப்பகுதியில் இருந்த செல்போன் கோபுரம் ஆடிமாத சூறைக்காற்றில் கீழே வீழ்ந்ததில்பொதுமக்களுக்கு காயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : commissioner ,cell tower ,
× RELATED நடிகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக கமிஷனர் அலுவலகத்தில் புகார்