×

குழந்தைகளுக்கு பாட்டி வைத்தியம் வேண்டாம் சமுதாய வளைகாப்பு விழாவில் ஆலோசனை

நாகை, செப்.30: குழந்தைகளுக்கு பாட்டி வைத்தியம் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் ஓஎஸ்மணியன் கூறினார்.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நாகையில் நடந்தது. கலெக்டர் பிரவின் பி நாயர் தலைமை வகித்தார். நாகை எம்பி செல்வராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சர் ஓஎஸ்.மணியன் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது: நமது குடும்பத்தில் ஒரு பெண் தாய்மை அடைவது வாழ்க்கையில் எட்ட முடியாத மகிழ்ச்சி ஆகும். வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு கல்வி மற்றும் தொழிற் கல்வி பயிற்சிகள், கர்ப்பகால பராமரிப்பு உட்பட அனைத்தும் அரசு இலவசமாக வழங்குகிறது. குழந்தை பிறந்தவுடன் பாட்டி வைத்தியம் வேண்டாம். அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் டாக்டர்களிடம் மட்டுமே காண்பிக்க வேண்டும். அதேபோல் நாம் பெற்ற குழந்தைகளுக்கு தாய் பால் மட்டுமே புகட்ட வேண்டும். அப்பொழுது தான் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்ககதிரவன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Community Baby Showers ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...