×

விளந்திட சமுத்திரத்தில் டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சீர்காழி, செப்.30: சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில், சீர்காழி ஊராட்சி ஒன்றியம் தூய்மை பாரத இயக்கம் சார்பில் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சீர்காழி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர்கள் அண்ணாதுரை, தியாகராஜன் முன்னிலை வைத்தனர். விவேகானந்தா பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார். தூய்மை பாரத இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், டெங்கு மற்றும் பிளாஸ்டி பயன்பாடால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
பேரணியில் கலந்து கொண்ட விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதி வழியாக வலம் வந்தனர்.
இதில் ஊராட்சி உறுப்பினர்கள் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் அருகே டெங்கு...