×

நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தி 9 ஆண்டாகியும் சாலை சீரமைப்பதில் அரசு மெத்தனம்

கீழ்வேளூர், செப்.30: நாகை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகை முதல் தஞ்சை வரையில் உள்ள சாலையை நன்கு வழி சாலையாக மேம்படுத்த கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுதப்பட்ட இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மெத்தனம் காட்டியதால் திட்டத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஆனது.இந்நிலையில் பல்வேறு இழுபறிகளுக்கு இடையே திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், சாலை பணி தொடங்கப்பட்டு பழைய சாலையில் அகலப்படுத்தப்படும் பணிக்கும், வயல்கள் வழியாக செல்லும் சா பணிக்கும் மண் கொட்டி சாலை பணி தொடங்க இருந்த நிலையில் 4 வழி சாலை இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டு பணி தொடங்கியது.இந்நிலையில் சில காரணங்களை கூறி இந்த சாலை பணி தொடங்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் நாகை முதல் திருவாரூர் வரையிலான 24 கி.மி. சாலையில் ஒரு கிலோ மீட்டர் சாலை மட்டும் பழைய சாலையில் விரிவாக்கம் செய்யப்பட்டும், மீதமுள்ள சாலைக்கு பதில் வயல் வெளியில் மண் கொட்டி புதிய சாலையாக போடப்படுவதாக இருந்தது. இதனால் நாகை - தஞ்சை சாலையை 6 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போட்டப்பட்டதால் சாலை முழுவதும் சேதம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் தேசிய நெடுஞ்சாலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்று சாலையை நாட தொடங்கினார்.

இந் நிலையில் பொது மக்கள், அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பு மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன் பேச் ஒர்க் என்ற பெயரில் சாலை சீரமைக்கப்பட்டது.  தற்போது இந்த நாகை - திருவாரூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கிடாரங்கொண்டான், ஆண்டிப்பாளையம், காணூர், அத்திப்புலியூர், நீலப்பாடி, கீழ்வேளூர், சிக்கல் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நீலப்பாடி, கீழ்வேளூர் அரசாணிக்குளம் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்கள் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே செல்கிறது. மேலும் சாலை பல்வேறு இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலையில் பயணிக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிக அளவில் விபத்துக்குள்ளாகி அதிகமானவாகள் பலத்த காயம் அடைந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறையில் யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாததாலும், தேசிய நெடுஞ்சாலையில் சாலை பணியாளர்கள் இல்லாததாலும் குறைகளை தெரிவிக்க முடியாத சூழ் நிலையில் பொது மக்கள், உள்ளனர். இந்த சாலையில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. உடனே மாவட்ட கலெக்டர் உடனே நடவடிக்கை எடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினரை சேதம் அடைந்த சாலைபகுதியை உடன் சீரமைத்து சாலையை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : government ,land acquisition ,Naga-Mysore National Highway ,
× RELATED தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில்...