×

கரூர் நரிக்கட்டியூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறி குளம் போல் தேக்கம்

கரூர், செப். 30: கரூர் நரிக்கட்டியூர் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வழியும் தண்ணீரை தடுக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் காந்திகிராமத்தை தாண்டியதும் வெள்ளாளப்பட்டி செல்லும் சாலையில் நரிக்கட்டியூர் பகுதி உள்ளது. இந்த பகுதி உட்பட பல்வேறு பகுதி குடியிருப்புகளுக்கு நரிக்கட்டியூர் பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தொட்டியில் இருந்து வழியும் தண்ணீர் சாலையின் மையப்பகுதியில் குளம் போல தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.

நல்ல தண்ணீரில் மட்டுமே டெங்கு கொசுக்கள் வளரும் என்பதால் அதற்கான சூழல் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுக்கும் வகையில் அதனை சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Karur Nerikkattiyur ,pool ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்