×

சுங்க கேட்டில் இருந்து தெரசா கார்னர் வரை தடுப்பு சுவர் அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரூர், செப். 30: கரூர் சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளான கோவை ரோடு, ஜவஹர் பஜார், தாந்தோணிமலை, ஈரோடு ரோடு போன்ற சாலைகளில் பாதுகாப்பு கருதி சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.இதே போல் கரூர் தெரசா கார்னர் பகுதியில் இருந்து காந்திகிராமம் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தெரசா கார்னர் பகுதியில் இருந்து சுங்ககேட் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக கரூர் போன்ற பகுதிகளில் இருந்து கருப்பக்கவுண்டன்புதூர், காவிரி நகர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் சாலையை எளிதில் கடக்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

அவ்வப்போது சாலையை கடக்கும் போது விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை முற்றிலும் போக்கும் வகையில் சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை தடுப்புச் சுவர் வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் பார்வையிட்டு அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Theresa Corner ,
× RELATED பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரசா...