×

கரூர் செங்குந்தபுரம் 7வது கிராசில் ஜல்லி கற்கள் கொட்டியதோடு நிறுத்தப்பட்ட தார்ச்சாலை பணி

கரூர், செப். 30: ஜவுளி நிறுவனங்கள் அதிகமுள்ள செங்குந்தபுரம் 7வது கிராஸ் பகுதிச் சாலையை தார்ச்சாலையாக மாற்ற உடனடியாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட மையப்பகுதியில் செங்குந்தபுரம் பகுதி உள்ளது. 1வது கிராஸ் முதல் 10வது கிராஸ் வரை உள்ள இந்த பகுதியை சுற்றிலும் 300க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் உள்ளன.ஆயிரணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏராளமான வாகன போக்குவரத்து இந்த சாலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செங்குந்தபுரம் 7வது கிராஸ் பகுதியில் உள்ள சாலையை மேம்படுத்தும் வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜல்லிக் கற்கள் கொட்டி பரவப்பட்டு பொக்லைன் மூலம் சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.அதற்கு பிறகு தார்ச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளாத காரணத்தினால், வாகனங்கள் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த 7வது கிராஸ் பகுதியில் தார்ச்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Karur Chengandapuram ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு