×

குளத்தூர் அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலயதிருவிழாவில் தேர் பவனி

குளத்தூர்,செப்.30: தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழாவில் நேற்று தேர்பவனி நடந்தது.குளத்தூர் அருகேயுள்ள தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கடந்த 20ம் தேதி மாலை திருப்பவனி, திருப்பலி, டியேற்றத்துடன் துவங்கியது இதையடுத்து.  தொடர்ந்து பத்து நாட்கள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர்வாதம், திருமுழுக்கு,  நற்கருணைபவனி, பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி, ஜெபமாலை நடந்தது. 26ம்தேதி மாலை புனித மிக்கேல் அதிதூதரின் சப்பர பவனி முக்கிய வீதிகளில் நடந்தது.
27ம்தேதி காலை தூத்துக்குடி மறைமாவட்ட தலைமைச் செயலர் நார்பட் தாமஸ், கூடங்குளம் பங்குதந்தை மரியஅரசு தலைமையில் திருப்பவனி, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், சிறுவர், சிறுமிகளுக்கான புதுநன்மை, உறுதி பூசுதல் நடந்தது. தொடர்ந்து மாலை நார்பட் தாமஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, சிறப்பு திருப்பலிகள் நடந்தது.

10ம்நாளான நேற்று காலை வடக்கன்குளம் அமலிவனம் புனித வளனார் குருக்கள் ஓய்வு இல்லம் ஜெபநாதன், சிவகங்கை மறைமாவட்ட குடிநோய் மறுவாழ்வு மைய இயக்குனர் அன்பின்அமலன் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியுடன் புனித மிக்கேல் அதிதூதர், ராஜகன்னி மாதா சொரூபங்களுடன் தேர்பவனி நடந்தது. தேரின் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கும்பிடு சரணம் போட்டபடி வணங்கி சென்றனர். திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று காணிக்கையாக உப்பு, மிளகு, வெல்லம், மெழுகுவர்த்திகளை செலுத்தினர். மாலை தருவைகுளம் மீனவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து இன்று (30ம்தேதி) காலை சென்னை மீனவர்கள் மற்றும் தருவைகுளம் பொதுமக்கள் இணைந்து அசனவிருந்து வழங்குகின்றனர். ஏற்பாடுகளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய கட்டளைதாரர்கள், பங்குதந்தை எட்வர்ட்ஜே, ஆன்மிக தந்தை பர்னபாஸ், பேட்ரிக்அந்தோணி விஜயன், ஆல்பர்ட் ஸ்டீபன் திலகராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Klathoor ,
× RELATED குளத்தூர் அருகே நீர்வழி ஓடையில் கட்டிய தடுப்பணைகள் ஒரு மாதத்தில் சேதம்