×

நாங்குநேரியில் பரபரப்பு நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

நாங்குநேரி, செப்.30:  நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. நாங்குநேரி நம்பிநகர் நான்குவழிச்சாலையில் வரும் போது திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது மோதமாலிருக்க காரை நிறுத்திய போது பின்னால் வந்த கார் முன் நின்ற கார் மீது மோதியது. உடனே பின்னால் வந்த காரின் இன்ஜின் தீப்பிடித்து காரில் பரவியது. உடனே அந்த வழியாக வந்த அரசு பஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்களில் இருந்த தீயணைப்பானை பயன்படுத்தி அங்கு வந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ கட்டுப்படாததால் நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. மேலும் யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை. இதனால் நான்கு வழிச்சாலையில் சுமார் அரை மணிநேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : road ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...