×

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் சாமிதோப்பில் தரிசனம்

தென்தாமரைகுளம். செப். 30:நாங்குநேரி தொகுதிக்கு நான் மிகவும் அறிமுகமானவன், எனவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அ.தி.மு.க.வேட்பாளர் கூறினார்.நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று  சாமிதோப்பு வைகுண்ட சுவாமி தலைமைப்பதிக்கு  தரிசனம் செய்ய வந்தார். அவரை அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவன தலைவர் பால. ஜனாதிபதி, மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர். நாராயணன் முத்திரி கிணற்றில் பதமிட்டு தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் நிருபர்களிடம் நாராயணன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதாவின்  சேவை திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ஆட்சி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இந்த சாதனைகளை தொகுதி மக்களிடம் கூறி வாக்கு சேகரிக்க இருக்கிறேன். நாங்குநேரி தொகுதிக்கு நான் மிகவும் அறிமுகமானவன். அந்த தொகுதியில் கிளைச் செயலாளராகவும், ஊராட்சி செயலாளராகவும், ஒன்றிய செயலாளராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் நான் பணியாற்றி இருக்கிறேன்.  தொகுதியிலுள்ள அனைத்து அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் எனக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்போடு தேர்தல் பணியாற்றி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார். பேட்டியின்போது நெல்லை, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Darshan ,constituency ,candidate ,AIADMK ,Samitop ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே