×

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் புகைப்படங்கள், சான்றுகள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம் நீட் தேர்வு ஆள் மாறாட்டம் எதிரொலியால்

வேலூர், செப்.30: நீட் தேர்வு ஆள் மாறாட்ட சம்பவத்தில் மாணவன் ஒருவனும், அவனது தந்தையும் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் புகைப்படங்கள், சான்றுகள் சரிபார்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ படிப்புக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், டாக்டராக முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தேனி மருத்துவக்கல்லூரி மாணவன் உதித்சூர்யா ஆற் மாறாட்டம் செய்து நீட்தேர்வு எழுதியது தெரிய வந்தது. இந்த சம்பவம் வெளியே தெரிய வந்ததால் மாணவன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவனது தந்தை 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் சென்னையில் போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வு ஆள்மாறாட்டம் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததில் இருந்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் சான்றுகள், நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சரிபார்ப்பு பணியில் இதுவரையில் ஆள்மாறட்டம் செய்ததாக எந்த மாணவரின் ஆவணங்களும் இல்லை என்று வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில்...