×

1 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் அதிகாரி ஆய்வு கலசபாக்கம் ஒன்றியத்தில்

கலசபாக்கம், செப்.30: கலசபாக்கம் ஒன்றியத்தில் மனிதவள மேம்பாட்டு துறை இணைச் செயலாளர் நேற்று ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெற்று வரும் ஜல்சக்தி அபியான் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். கலசபாக்கம் ஒன்றியம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் ₹1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணைச் செயலாளர் மற்றும் பொருளாதார ஆலோசகர் ரஜிப்குமார்சென் நேற்று ஆய்வு செய்தார்.

மேலும், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறித்தும், ஜல்சத்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் எண்ணிக்கை, பணியின் தன்மை, முழுமையாக முடிக்கப்பட்ட பணிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, திட்ட இயக்குநர் ஜெயசுதா, செயற் பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் ஜெஹன்ஆரா, பிடிஓக்கள் நிர்மலா, அன்பழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டையில் ரூ. 1 லட்சத்திற்கு...