×

இடைப்பாடியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனைஇடைப்பாடியில்

இடைப்பாடி, செப். 30:  இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் சுகாதார பணிகள்  மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம், இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது.சங்ககிரி ஆர்டிஓ அமிர்தலிங்கம், தாசில்தார் கோவிந்ராஜன், நகராட்சி ஆணையாளர் முருகன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சீரான சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யவேண்டும். மேல்நிலை தொட்டிகளுக்கு சரிவர தண்ணீர் ஏற்றப்படுகிறதா, சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் காய்ச்சல் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துள்ளனரா என கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தை முடித்து வெளியே வந்த கலெக்டரிடம், வேம்பனேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், வெள்ளாளபுரம் ஏரியின் நீர்வழிப்பாதையை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தாதாபுரம் ஊராட்சி மணியகாரபாளையத்தில் மோரி அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர்.

Tags : Collector ,
× RELATED சிறுபான்மையின கைவினை கலைஞர்கள்...