×

ஆத்தூர் அருகே நீர்வரத்து வாய்க்காலை மாற்றியதால் காய்ந்த ஏரிகள்

ஆத்தூர், செப்.30: ஆத்தூர் அருகே தொடர் மழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், அய்யங்கரடு பகுதியில் நீர்வரத்து வாய்க்காலை சிலர் மாற்றி அமைத்ததால், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தடைபட்டு காய்ந்து கிடக்கிறது.ஆத்தூர் அருகே,  ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில், கடந்த சில  நாட்களாக தொடர்மழை பெய்ததால், அங்குள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. மேலும், கல்லாறு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அருவியாக கொட்டியது. கல்லாறு ஓடையில் வரும் தண்ணீர்,   தென்னங்குடி பாளையம் புது ஏரி, அய்யனார் கோயில் ஏரி, கல்லாநத்தம் ஏரிகளுக்கு  செல்லும் வகையில், பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அய்யங்கரடு பகுதியை சேர்ந்த சிலர் வாய்க்காலை  மறித்து, நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து மாற்றி அமைத்தனர். இதனால் ஏரிகளுக்கு  தண்ணீர் வரத்து முற்றிலுமாக தடைபட்டு போனது. கனமழை பெய்தபோதிலும் ஏரிகளுக்கு போதிய  தண்ணீர் வரவில்லை.இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறுகையில், ‘சேலம்  மாவட்டத்தில், தற்போது போதிய மழை பெய்தாலும், நீர்வழித்தடங்கள்  மறிக்கப்பட்டதால், ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றி,  வாய்க்காலை தூர்வாரக் கோரி, பொதுப்பணித்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை  எடுக்கவில்லை. இதனால், மழை பெய்தும் தண்ணீர் வீணாகி போனது. கலெக்டர்  நேரில் ஆய்வு நடத்தி, வாய்க்காலை மாற்றியமைத்தவர்கள் குறித்து, முறையான  விசாரணை நடத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : lakes ,Attur ,water bodies ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!