தாரமங்கலத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தாரமங்கலம், செப்.30: தாரமங்கலம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு, கலை நிகழ்ச்சி மற்றும் நாடகம் நடத்தப்பட்டது. இதில் சுகாதார தமிழகம், திடக்கழிவு மேலாண்ம திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, ஊட்டச்சத்து வழங்கி குழந்தை வளர்ப்பு ஆகியவை இடம்பெற்றன. நிகழ்ச்சிகளை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Related Stories: