×

ஓசூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

ஓசூர், செப்.30: ஓசூரில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஓசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை சாலை வழியாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இந்த குழாய் மூலம் தான் மற்ற மேல்நிலை தொட்டிகளுக்கு விநியோகிக்கப்பட்டு, பின்னர் நகர் பகுதியில் உள்ள வார்டுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் அதிகளவு வீணாகி வருகிறது. எனவே, இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Breakdown ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ