×

வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி, செப். 30: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் மண்டல வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தாசில்தார் பார்த்திபன், உதவி தேர்தல் அலுவலர் மனோகரன் ஆகியேர் முன்னிலை வகித்தனர். தேர்தல் துணை தாசில்தார் சிவா வரவேற்றார். இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு, மண்டல அலுவலர்கள், வீடியோ பதிவு குழுவினர்களுக்கு தேர்தல் பணி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், தலைமையிடத்து துணை தாசில்தார் முத்தம்மாள், பறக்கும் படை அறவாழி, நாராயணன்,  துணை தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் விஜயன், மூர்த்தி, மெகருனிஷா, தரணி, வருவாய் உதவியாளர்கள் பாரதிதாசன், தஸ்தகீர், பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Polling Officers Advisory Meeting ,
× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...