×

கள்ளக்குறிச்சி நகராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பை

கள்ளக்குறிச்சி, செப். 30: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் அதிகாரிகள் அலட்சியத்தால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் அமைந்துள்ளது. அதில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏராளமானவை அமைந்துள்ளது. அந்தந்த பகுதியில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து எடுத்து நகராட்சி நிர்வாகம் துப்புரவு ஊழியர்களை கொண்டு வாகனங்களில் எடுத்து சென்று வருகின்றனது. ஆனால் பெரும்பாலான தெரு பகுதி மற்றும் முக்கிய சாலை பகுதியில் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியில் குப்பைகளை சரிவர துப்புரவு ஊழியர்கள் சேகரிக்க வராததால் ஆங்காங்கே சாலை பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

அதுவும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர் குப்பை அதிகளவில் நிரம்பி உள்ளது. அதாவது கேஏஜி நகர், ஜெயா கார்டன், விளாந்தாங்கல் ரோடு செல்லும் சாலை பகுதி, கேபிஆர் நகர், கச்சிராயபாளையம் செல்லும் மெயின் ரோடு, பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஆகிய பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. ளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைகளை அகற்றாமல் சில நேரங்களில் அதே பகுதியிலே நகராட்சி ஊழியர்கள் தீவைத்து எரித்து விடுகின்றனர். இதனால் குடியிருந்து வரும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு அசுத்தம் ஏற்படுகிறது. தெரு பகுதி மற்றும் முக்கிய தார் சாலை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் சரிவர அகற்றுகிறார்களா என்பதை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

சாலை பகுதியில் அதிக குப்பைகள் நிரம்பி கிடப்பதால் தெரு நாய்கள் அதனை கலைத்து விடுவதால் துர்நாற்றம் விசுவதோடு மழை நீர் குப்பைகளில் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சாலை பகுதியில் நாள் கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் அகற்றுவதற்கு கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.

Tags : Kallakurichi ,municipality ,
× RELATED கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ: கண்...