×

சிதம்பரம் அருகே ஆட்டோ திருடிய 2 பேர் கைது

புவனகிரி, செப். 30: சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தை  சேர்ந்தவர் ராஜேந்திரன்(51). சம்பவத்தன்று இவர் புதுச்சத்திரம் ரயில்  நிலையத்திற்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார். ரயில் நிலையத்தின் வாயிலில்  ஆட்டோவை நிறுத்தி விட்டு உள்ளே சென்று ரயில் செல்லும் நேரம் குறித்து  விசாரித்து விட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்துள்ளார்.அப்போது அவரது ஆட்டோவை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட அவர் பல இடங்களில்  தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அவரது ஆட்டோவை மர்ம நபர்கள்  திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், ராஜேந்திரனின் ஆட்டோவை திருடியதாக சிதம்பரம் இளமையாக்கினார் கோயில்  தெருவை சேர்ந்த சரவணன் (30) மற்றும் சிதம்பரம் அருகே உள்ள கீழச்சாவடி  கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது  செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : auto theft ,Chidambaram ,
× RELATED டெல்லியில் இருந்து சென்னை வந்த ப.சிதம்பரத்தின் கையில் முத்திரை