×

மணல் கடத்திய 8 பேர் கைது

பண்ருட்டி, செப். 30: பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அனுமதியின்றி மணல் எடுத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளிவந்த நன்னிக்குப்பம் செல்வகுமார்(23), சேட்டு(35), முருகவேல்(40), கோபாலகிருஷ்ணன்(31), சேந்தநாடு வீரபத்திரன்(26), ஆனந்தராஜ்(23), ரெட்டிப்பாளையம் ராதாகிருஷ்ணன்(49), கந்தசாமி(60) ஆகிய 8 பேரை கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags : persons ,
× RELATED மொரீஷியசில் சிக்கிய 98 பேர் சென்னை திரும்பினர்